தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இறக்குமதி மணலை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மணலை விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்த வழக்கில், மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மணல் குவாரிகள் 6 மாதங்களில் மூட உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், வெளிநாட்டு மணலை விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்து உள்ளது. இந்த மனுவில் வெளிநாட்டு மணலாக இருந்தாலும் மாநில விதிகளுக்கு உட்பட வேண்டுமென்றும், தமிழகத்தில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு தனியாரை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…