இருப்போர் பொருள் தாருங்கள், இல்லாதவர்கள் ஆதரவு தாருங்கள்…!திமுக பொருளாளர் துரைமுருகன்
இருப்போர் பொருள் தாருங்கள், இல்லாதவர்கள் ஆதரவு தாருங்கள் என்று திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பேசியுள்ளார்.
நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
அதன் பின் திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பேசுகையில், பொருளாளர் வேலை கலெக்ட் செய்வது தான். இருப்போர் பொருள் தாருங்கள், இல்லாதவர்கள் ஆதரவு தாருங்கள் என்று திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பேசியுள்ளார்.
DINASUVADU