“இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசை” MP பிரதமருக்கு கடிதம்

Default Image

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Image result for ஸ்ரீஹரி கோட்டாஇது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் கனிமொழி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என்ற தி.மு.க. மற்றும் தமிழக மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்தியாவிலேயே தற்போது ஒரே ஒரு ராக்கெட் ஏவுதளம் தான் உள்ளது. அது ஸ்ரீஹரி கோட்டாவில் இயங்குகிறது என்பது உங்க ளுக்குத் தெரியும். விண்வெளித் திட்டங்களை மேம்படுத்தியுள்ள மற்ற நாடுகள் அனைத்தும் பல்வேறு ராக்கெட் ஏவுதளங்களை வைத்துள்ளன. எனவே ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கும் ராக்கெட் ஏவுதளத் துக்கு உதவியாக மற்றொரு புதிய ஏவுதளத்தை உருவாக்குவது அவசியமாக உள்ளது.

Image result for இஸ்ரோ2013-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதியன்று நான் கேட்ட கேள்விக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நாடாளுமன்றத்தில் தன் பதிலை முன்வைத்தது. அதில், ஸ்ரீஹரி கோட்டாவில் தற்போதுள்ள ராக் கெட் ஏவுதளத்தின் திறன் களைப் பரிசீலித்தும், அடுத்த 10 ஆண்டுக ளுக்கான ராக்கெட் ஏவும் தேவை களை அறிந்தும், புதிய ஏவுதளத் தின் தேவை குறித்தும் மதிப்பிடு வதற்காக நிபுணர் குழு அமைக் கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பது குறித்து 2013-ஆம் ஆண்டு பிரதமருக்கு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.

Image result for எல்.பி. எஸ்.சிமகேந்திரகிரியில் உள்ள திரவ உந்து விசை அமைப்புகள் மையத்தில் (எல்.பி. எஸ்.சி.) உள்ள விஞ்ஞானிகளின் விரிவான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில்தான் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். எல்.பி.எஸ்.சி.யின் முன்னாள் தலைமைப் பொதுமேலாளரின் கருத்துப்படி, குலசேகரன்பட்டி னத்தில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள் ஏவப்பட்டு இருந்தால், 1,350 கிலோ எடையுள்ள உபகரணங்களுக்குப் பதிலாக 1,800 கிலோ எடையுள்ள உபகரணங்களை அனுப்பியிருக்க முடியும். பூமத்தியரேகைக்கும், எல்.பி.எஸ்.சி.க்கும் அருகில் இருப்பதால் இந்தியாவின் அடுத்த ராக்கெட் ஏவுதளம் உருவாக்க குலசேகரன்பட்டினம் தான் சிறந்த இடமாக இருப்பதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது. எனவே, இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டி னத்தில் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்