இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்கு! பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி- மு.க.ஸ்டாலின் அறிக்கை
பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குழு வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள்.இதனால் நாட்டின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக கூறி அவர்கள் அனைவரின் மீதும் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் @Ram_Guha, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை!
சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு!#SeditionCase pic.twitter.com/pJ5DK9bgNN
— M.K.Stalin (@mkstalin) October 5, 2019
இந்தநிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி கண்டனத்திற்குரியது. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு என்று தெரிவித்துள்ளார்.