இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Default Image

மதுரை:பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

பேரரசர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில்,இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், “கடந்த 2019 ஆம் ஆண்டு நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக பொதுக்கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்து உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.அதாவது,பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து, எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில்,பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning