இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு கடும் கட்டுப்பாடு…! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
2017ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விதித்த கட்டுப்பாடுகளை இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கும் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி முருகானந்தம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2017ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விதித்த கட்டுப்பாடுகளை இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கும் விதிக்க வேண்டும்.இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு கொண்டு வரப்படும் ஜோதி நினைவிடத்திலிருந்து 1 கி.மீ.,தொலைவிற்குள் இருந்து தான் வரவேண்டும் என்பது விதி என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU