இமயமலையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி ஆன்மிக பயணம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் .
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், தனது ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறவும், பாபாவை வழிபடவும் இமயமலைக்கு சென்றார். தனது ஆன்மிக சுற்றப் பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ளார்.இந்நிலையில் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் முடிவு செய்து விட்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வருகிற 5 நாட்களுக்கு நடக்கிறது. இது முடிந்த பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் ரஜினி விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.அதன் பிறகு திட்டமிட்டமிட்டபடி இம்மாத இறுதியில் உடல் பரிசோனைக்காக அமெரிக்கா செல்கிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க சிகிச்சை முடிந்து திரும்பியபோது மக்கள் கொடுத்த வரவேற்பு போன்று இந்த முறை ரஜினியை வரவேற்க பெரும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொடி, சின்னத்தை அறிவிப்பார் என்றும் ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
எனவே இமயமலையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி ஆன்மிக பயணம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…