அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் எந்தெந்த பகுதிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து அதிமுக அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில், கலந்துகொள்ளும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் தலைமையிலும், சேலத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனியில் நத்தம் விசுவநாதன் தலைமையிலும், திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டங்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…