இரண்டாவது நாளாக இன்று நடந்து வரும் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் இருந்து ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்துள்ளார். இது குறித்து வெளியில் வந்த தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தற்போதுள்ள அரசு மெஜாரிட்டி அரசு என அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் கூற முயன்ற போது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் நான் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றேன். தகுதி நீக்கம் குறித்தும் பேச முற்பட்டேன். ஆனால் நான் பேசுவதற்கு சபாநாயகர் முற்றிலுமாக அனுமதி தர மறுத்து விட்டார்” என்று தினகரன் தன்னுடைய வெளிநடப்பிற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவருடன் எதிர்க்கட்சியான திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மற்றும் அவரது உறுப்பினர்களும் ஜெ.அன்பழகன் தொடர்ந்து பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “திமுக கட்சியினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது” என்று கூறியுள்ளார்
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…