இன்றைய சட்டப்பேரவையில் இருந்து தினகரன், ஸ்டாலின் வெளிநடப்பு ஏன்..??

Default Image

 
இரண்டாவது நாளாக இன்று நடந்து வரும் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் இருந்து ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்துள்ளார். இது குறித்து வெளியில் வந்த தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தற்போதுள்ள அரசு மெஜாரிட்டி அரசு என அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் கூற முயன்ற போது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் நான் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றேன். தகுதி நீக்கம் குறித்தும் பேச முற்பட்டேன். ஆனால் நான் பேசுவதற்கு சபாநாயகர் முற்றிலுமாக அனுமதி தர மறுத்து விட்டார்” என்று தினகரன் தன்னுடைய வெளிநடப்பிற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவருடன் எதிர்க்கட்சியான திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மற்றும் அவரது உறுப்பினர்களும் ஜெ.அன்பழகன் தொடர்ந்து பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “திமுக கட்சியினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது” என்று கூறியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்