இன்று டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக முதலமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் 19 பேருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கின. இதனிடையே ஆளுநரிடம் மனு கொடுத்தவர்களின் ஒருவரான ஜக்கையன், தனது நிலையை மாற்றிக் கொண்ட நிலையில் எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கோரி, அதிமுக கொறடா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் பேரில் 18 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். துரைசாமி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பாணையும் வெளியிடக்கூடாது.
அதேபோல மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் நீதிபதி கே. ரவிசந்திரபாபு வழக்கை விசாரிக்க தொடங்கினர்.
ஆனால் நவம்பர் 2 ஆம் தேதி அன்று நீதிபதி கே.ரவிசந்திரபாபு வழக்கின் முக்கியத்துவத்தை கருதி தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 – ஆம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் 18 எம்.எல்.ஏ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் வழக்கை முதல் அமர்வே விசாரிக்கும் என அறிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 தேதி – ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணை தொடங்கியது.
கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. ஜனவரி மாதம் 23 – ஆம் தேதி அன்று அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு. இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட உள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…