இன்று மாலை 5 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான தங்களின் போராட்ட வடிவம் தெரியும்…!இயக்குநர் பாரதிராஜா…..
இயக்குநர் பாரதிராஜா ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான தங்களின் போராட்ட வடிவம் குறித்து மாலை 5 மணிக்கு தெரியும் என கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர் பச்சான், வி.சேகர், வெற்றிமாறன், எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, விவசாய அமைப்பைச் சேர்ந்த பெ.மணியரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அனைத்துக் கட்சியினரும் தங்களது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறினார். மாலை 5 மணிக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று பாரதிராஜா கூறினார்.
இதனிடையே, ஐபிஎல் போராட்டம் குறித்து எழுப்பப் பட்ட கேள்வியால் கோபமடைந்த இயக்குநர் தங்கர்பச்சான், செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.