இன்று புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை!
புழல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் 47 கைதிகள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 67 கைதிகள் கடந்த 6ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் அதன்பின்னர் 52 கைதிகள் 12ம் தேதி விடுதலையானார்கள். இந்நிலையில், மூன்றாம் கட்டமாக 47 கைதிகள் இன்று விடுவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.