இன்று நாடெங்கும் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்!
இன்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகளில் சிறப்பு தொழுகைகளை நடத்துகின்றனர்.
புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்த இஸ்லாமியர்கள், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ஏழை எளியோருக்கு உதவி செய்து ஈகைப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழகத்தில் நேற்று பிறை தெரிந்ததையடுத்து, இன்று ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் விடிய விடிய விற்பனை களைகட்டியிருந்தது. ரம்ஜானுக்கான பொருட்கள், இனிப்புகள், ஆடைகளை வாங்க ஏராளமானோர் திரண்டதால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, பாலஸ்தீனம், சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.