தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், வருகிற 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காவிட்டால் , அனைத்து கட்சியினரோடு ஆலோசித்து போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். கருணாநிதி முதலமைச்சராக இருந்திருந்தால் கர்நாடக அரசிடம் பேசி காவிரியில் தண்ணீரை பெற்றிருப்பார் என்று அவர் கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை அன்று நடைபெறும் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசித்து மீண்டும் சட்டமன்றம் செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…