இன்று கன்னியாகுமரியில் ஒகி புயல் நிவாரணம் கேட்டு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்,கன்னியாகுமரியில் இன்று ஒகி புயல் நிவாரணம் கேட்டு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு, அனுமதி மறுப்பு ஆணை எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் வீட்டு சுவரில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத், தடையை மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்திற்கு மக்களை அழைத்து வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.