இன்று இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் சட்டசபை கூடுகிறது!
கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை தி.மு.க. உறுப்பினர்கள் பேரவை கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்றும் அறிவித்தார். இந்நிலையில், திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பல்வேறு கட்சித் தலைவர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் பேரவைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று திமுக எம்.எல்.ஏக்கள் இன்று முதல் சட்டமன்ற அலுவல்களில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரச்சனைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.