அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கட்டிடம் திறப்பு விழா ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கோனார்பாளையம் நடந்தது.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் இதில் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ண வண்ண சீருடை அணிந்து மாணவர்கள் செல்கிறார்கள்.
ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கந்தக அமிலம் வாயு கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இன்னும் 2 நாட்களில் அவை முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். தூத்துக்குடி மக்கள் கவலைப்பட வேண்டாம். அச்சப்படவும் வேண்டாம்.
சேலம்-சென்னை, சேலம்-கோவை இடையே அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலை மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த பசுமை சாலை அமைந்தால் சேலத்தில் இருந்து 4 மணி நேரத்தில் சென்னைக்கு சென்றுவிடலாம்.
ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கங்கணத்துடன் எதிர்க்கட்சியினர் மக்களை தூண்டி விடுகிறார்கள்.
இந்த திட்டத்தால் ஏற்படும் இழப்புகளை அரசு ஏற்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிதி வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…