இன்னும் அரைமணி நேரத்தில் விடுதலையாகிறார் சசிகலா;மருத்துவமனைக்கு புறப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள்

பெங்களூர்:இன்னும் அரைமணி நேரத்தில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா விடுதலைக்கான கையொப்பம் பெற சிறைத்துறையிலிருந்து புறப்பட்டுவிட்டனர் என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிடம் அவர் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பம் பெற்ற பின்னர் அவர் விடுதலை முறையாக அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா விடுதலை அடுத்து அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க வரும் நபர்கள் தீவிர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
சசிகலாவின் முழு உடல்நலனுடன் இருப்பதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.அவர் விடுதலையாக உள்ள நிலையில் அவரை காண அவரது தொண்டர்கள் மருத்துவமனையை சுற்றி குவிந்துவருகின்றனர்.தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மருத்துவமனை அமைந்துள்ள சாலைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025