இனி 50% முதல் 100% வரை வரி உயர்வு..!தமிழக அரசு அதிரடி..!
தமிழ்நாடு முழுவதும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தி தமிழக அரசு அதிரடி அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் , தமிழகத்தில் இதுவரை உரிய காலத்திற்குள் சொத்துவரியை கட்டத் தவறுபவர்களுக்கு, வட்டி விதிக்கும் நடைமுறை தற்போது இல்லை என்றும், 4-ஆவது மாநில நிதி ஆணையம், சொத்து வரியை காலம் தாழ்த்தி செலுத்துவோருக்கு, வட்டி விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆய்வு செய்யுமாறு, அரசுக்கு பரிந்துரை செய்தது என்றும் அந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, அதை ஏற்பது என முடிவு செய்துள்ளது என்றும் கூறினார். கூட்டத்தொடரின் கடைசி நாளன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இது மக்களுக்கு பேர் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
தமிழக அரசு சார்பாக புதிய சொத்து வரி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி மற்றும் குடியிருப்பு இல்லாத பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.