இனி ரயிலில் படிகட்டுகளில் தொங்கினால் சிறை தண்டனை ..!ரயில்வே ஆணையர் அதிரடி
சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே கோட்ட ஆணையர் லூயிஸ் அமுதன் கூறுகையில் ,ரயில்வே பாதுகாப்பு படையினர் இனி புறநகர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் .ரயில் படிகட்டுகளில் தொங்கிக்கொண்டும்,படியில் நிற்பவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து,அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைத்தண்டனை அல்லது அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டும், கீழே விழுந்தும் 488 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதபோல் தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு 449 பேரும், ரயிலில் இருந்து தவறி விழுந்து 39 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.