இனி மேல் புதிய சீருடை நிறம் மாற்றம்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

Default Image

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளின் நிறம் மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசுப்பள்ளிகளில் படிக்கும்1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பச்சை   நிற  சீருடை  வழங்கப்படும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பழுப்பு  நிற  சீருடை  வழங்கப்படும்.
மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டு முதல் சீருடை மாற்றம் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்