திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக இனி மக்களை மட்டுமே நம்பும் என தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் அண்ணாநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார். சட்டமன்றமும், நீதிமன்றமும் கைவிட்டதால் இனி மக்களை மட்டுமே நம்பப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.