தமிழக சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதலளிக்கையில், “தமிழகத்துக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் அனைத்து அனல் மின் நிலையங்களும் முழுமையான மின் உற்பத்தியை வழங்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு 20 லட்சம் டன் நிலக்கரி ஒதுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, நாள்தோறும் தமிழகத்துக்கு நிலக்கரி அனுப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி ஐந்து நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்றும், எதிர் காலத்தில் நிலக்கரியை கையிருப்பில் வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோடைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், காற்றாலை மூலமும் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதனால் பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…