இனி நோ பவர் கட் ! சட்டமன்றத்தில் அமைச்சர் அதிரடி..!

Default Image

தமிழக சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதலளிக்கையில்,   “தமிழகத்துக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் அனைத்து அனல் மின் நிலையங்களும் முழுமையான மின் உற்பத்தியை வழங்கி வருகிறது.  மூன்று மாதங்களுக்கு முன் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு 20 லட்சம் டன் நிலக்கரி ஒதுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த  ஒப்பந்தத்தின் படி, நாள்தோறும் தமிழகத்துக்கு நிலக்கரி அனுப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.Image result for மின்தடை

மேலும், தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி ஐந்து நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்றும், எதிர் காலத்தில் நிலக்கரியை கையிருப்பில் வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோடைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், காற்றாலை மூலமும் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதனால் பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.Image result for சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்