கலப்பட தேயிலை தொழிற்சாலை சென்னையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் செயல்பட்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உடலுக்கு புத்துணர்வு அளிக்க கூடிய தேயிலையில் புற்று நோய் வரவழைக்கும் ரசாயணங்கள் கலக்கப்படும் பின்னணி குறித்து விவரம்
தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகர்பகுதிகள் வரை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தேனீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகின்றது
சென்னையில் இந்த டீக்கடைகளை குறிவைத்து ரசாயனம் கலந்த கலப்பட டீ தூள் விற்பனை கொடிகட்டிப்பறப்பதாக உணவுப்பொருள் பாதுகாப்புதுறையினருக்கு புகார்கள் குவிந்தன.
பிரபல நிறுவனங்களில் டீ தூள் பாக்கெட்டுகளை வாங்கும் டீக்கடைகாரர்கள், அதிக வண்ணம் வேண்டும் என்பதற்காக அதில் இந்த கலப்பட தேயிலையை கலந்து டீ தயாரித்து விற்பனை செய்வதாக கூறப்படுகின்றது. டீக்கடைகளில் பயன்படுத்தும் தேயிலையை குளிர்ந்த நீரில் கலந்து பாருங்கள் நிறம் மாறினால் அது கல்லப்பட தேயிலை..! நிறம் மாறவில்லை என்றால் அது தரமான தேயிலை என்று உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர்…!
இந்த நிலையில் சென்னையில் அரும்பாக்கம், செந்தில்நகரில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த கலப்பட தேயிலை தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளமாநிலத்தை சேர்ந்த தாமஸ் என்பவரது தேயிலை குடோனில் இருந்து தான் இது போன்ற ரசாயண கலப்பட தேயிலை பாக்கெட்டுக்கள் டீக்கடைகளுக்கு பாதிவிலைக்கு சப்ளை செய்யப்படுவது தெரியவந்ததையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
அங்கிருந்த தேயிலை தூளை தண்ணீரில் போட்டு பரிசோதித்த போது தண்ணீரின் நிறம் மாறியது..! அங்கிருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 டன் கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது.
அங்குள்ள தேயிலையில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் 3 விதமான ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மட்டமான 1 கிலோ டீ தூளில் 10 கிராம் டார்ட்ராசைன், ஹார்மோ சைன், சன்செட் எல்லோ ஆகிய ரசாயனங்கள் கலக்கப்படுவதால் அந்த தேயிலை கலவையை பயன்படுத்தும் நபர்களுக்கு நாளடைவில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது.
கலப்பட தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் தாமஸிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டமான தேயிலையை டன் கணக்கில் வாங்கி வந்து அதில் ரசாயண கலவையை சேர்த்து, மெரினா, ஹில் டாப், மவுண்டன் குளோரி போன்ற பெயர்களில் பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தாமஸ் ஏற்கனவே ஒருமுறை கலப்பட வழக்கில் சிக்கியவர் என்பதால் அவரது தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
சிங்கிள் டீ யின் விலை 10 ரூபாய்..! விலைகொடுத்து புற்று நோயை வாங்கிச்செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க கடைகளில் தரமான தேயிலை தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது..!
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…