இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்.. ஆன்லைனில் புகார் செய்யலாம் ..
காவல் நிலையங்களில் சென்று புகார் தெரிவிப்பதற்கு பதிலாக இனி ஆன்லைன்-ல் புகார் தெரிவிக்கும் முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இதனை வரும் 6மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்பட இருக்கின்றன. இதன் படி காவல் துறையினர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈமெயில் ,தபால் ,எஸ் எம் எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறையில் அளிக்கும் புகார் மீதான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி ஜி பி யின் 2016ஆம் ஆண்டின் சுற்றறிக்கை மீண்டும் நினைவு படுத்த வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ண சாமி தெரிவித்துள்ளார்.