உதவி கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும், அவர் தனது வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
உதவி கல்வி அதிகாரிகள் இனிமேல் வட்டார கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் இனிமேல் தொடக்க கல்வி துறையில் உள்ள பள்ளிகளை மட்டும் அல்லாமல், பள்ளி கல்வித்துறையில் உள்ள பள்ளிகள், மெட்ரிகுலேசன் இயக்குனரக பள்ளிகள் அனைத்தையும் அவர்களது எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆய்வு செய்வார்கள்.
அதுபோல மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக மாற்றப்படுகிறார்கள். அவர்களும் தங்களின் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வார்கள்.
அவர்களுக்குள்ள பொறுப்புகளும் வருமாறு
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்யவேண்டும்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறதா?,நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறதா?,மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? அரசு உதவி பெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் அங்கீகாரம் முறையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறதா?
பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளிகள் நிலவரத்தை அதற்குரிய இயக்குனருக்கு, மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரையை அனுப்பி வைக்கவேண்டும்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…