இனி இலவச மின்சாரம் ரத்து..! தமிழக அரசு அதிரடி முடிவு..!
தற்போது தமிழகத்தில் மின் நுகா்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதி படைத்தவா்களுக்கு இதனை ரத்து செய்யலாமா? என தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
பொதுவாக,தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் நுகா்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே…
ஆனால் இதற்கு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி செலவாகிறது. இத்தொகையை மின்சார வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு மானியத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஏன் அதே போன்று வசதி படைத்தோருக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யகூடாது ? என்ற அடிப்படையில் தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.