இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!
யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி அவைகளை ஓய்வெடுக்கவும் புதிய புத்துணர்வு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஒரு ஏற்பாடு ஆகும்.
இதில் யானைகளுக்குப் புத்துணர்வு வழங்குதல் மற்றும் உணவு ஊட்டுதல், உடற்பிடிப்பு அளித்தல் மற்றும் நடைபயிற்சி கொடுத்தல் போன்றவை நடைபெறும் மேலும் யானைகளின் உடல் நலன் தினமும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்படும்.
இதனால் யானைகளுக்கு மதம் பிடித்தல் போன்ற இருக்கமான நிலை அகற்றப்பட்டு புத்துணர்வு ஏற்பட வாய்ப்பளிக்கும் விதமாக தமிழக அரசு இந்து அறநிலைய துறையின் கீழ் செயல்படுத்துவருகிறது.மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ளும் யானைகள் உற்சாகமடைவதாகவும்,அவைகள் மகிழ்வதாகவும் தெரிவிக்கின்றனர் அதிகாரிகள்.
இந்நிலையில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் மனு அளித்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.