உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த தமிழ் நாகரிங்ககளின் சிறப்பு.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அந்தந்த நாடுகள் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரங்குகள் அமைத்துள்ளன.
அந்தவகையில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். அதன்படி துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்.
தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரங்கில் மார்ச் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று இரவு தமிழ் நாகரீகத்தின் சிறப்பு ஒளிரப்பட்டது. இந்நிகழ்வின் போது முதலமைச்சர் அதனை பார்த்து கண்டுகளித்தார்.
இந்த நிலையில், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…