இந்திய பொருளாதாதரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது : கமலஹாசன்
- GO BACK MODI பதிவிற்காக இளைஞர்களை டிவிட்டருக்கு கொண்டு வந்தது தான், மோடியின் சாதனை.
- டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக நிற்கவைத்தது தான் திராவிடக் கட்சிகளின் சாதனையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
கோவை கொடீசியா மைதானத்தில், மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம்கட்ட மக்களவை வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் பேசிய அவர், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாள், பலருக்கு இறப்பு நாள் என்றும், சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் கலந்துவிட்டதாக அரசியல் சாயம் பூசினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனக் கூறிய பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது என விமர்சித்த கமல், டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக நிற்கவைத்தது தான் திராவிடக் கட்சிகளின் சாதனையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
GO BACK MODI பதிவிற்காக இளைஞர்களை டிவிட்டருக்கு கொண்டு வந்தது தான், மோடியின் சாதனை என கூறினார். மேலும், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை, மத்திய அரசு உடைத்துவிட்டதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.