இந்தியாவை வழிநடத்த மோடியை விட ஸ்டாலின் குட்…சந்திரபாபு நாயுடு தடாலடி…!!

Default Image

பாஜகவிற்கு எதிராக ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உருவாக்கும் தேசிய அளவிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு  அந்தஸ்து அளிக்கவில்லை என்று  குற்றஞ்சாட்டிய சந்திரபாபு நாயுடு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.இதனையடுத்து , பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு  எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரை கடந்த 1 ஆம் தேதி சந்தித்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, மதசார்பற்ற ஐனதா தளம் கட்சி தலைவரும் கா்நாடகா முதல்வருமான குமாரசாமி ஆகியோரை நேற்று      (வியாழக்கிழமை) சந்தித்து பேசினார்.இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்த சந்திரபாபு நாயுடு,  நாடாளுமன்றம தேர்தலை முன்னிட்டு பாஜக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒர் அணியாக செயல்படுவது குறித்து விவாதித்தார்.

இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாவின், “மத்தியில் மக்கள் விரோத மோடி ஆட்சியை  வீழ்த்த சந்திரநாயுடு எடுத்திருக்கும் மதசார்பற்ற கூட்டணி முயற்சிக்கு  திராவிட முன்னேற கழகம் ஆதரவு அளிக்கிறது ” என கூறினார்.இதைத்தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, ” சி.பி.ஐ, ஆர்.பி.ஐ போன்ற தன்னாச்சி அமைப்புகளை மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அரசு செயல்பட வில்லை, டெல்லியில் உள்ளவர்கள் தான் தமிழகத்தை இயக்குகின்றனர்.

தேசிய ஐனநாயக கூட்டணி தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. மோடியை விட நாட்டை சிறப்பான முறையில் மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார். பாஜகவிற்கு எதிரான உருவாக்கப்படும் இந்த கூட்டணிக்கு தலைவர் நான் இல்லை. நான் வேறும் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே ” என்றார்.இந்த கூட்டணி முயற்சியில்  அடுத்தப்படியாக திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேனர்ஜியை சந்தித்து பேச உள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதால், பாஜகவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றன.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்