தோஹா வங்கியின் மூன்றாவது கிளை இந்தியாவில் மும்பை, கொச்சி ஆகிய இடங்களை தொடர்ந்து சென்னையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கத்தார் நாட்டின் மிகப்பெரிய தனியார் வணிக வங்கிகளில் தோஹா வங்கியும் ஒன்றானதாகும். இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக சென்னை கிளை திறக்கப்பட்டுள்ளாதாக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது இந்தியா மற்றும் கத்தார் இடையே உலகளாவிய ஒருங்கிணைப்புகளை மேம்படுத்த உதவும் என தெரிவித்தார். மேலும் மற்ற வங்கிகளை போல அல்லாமல் மக்களுக்கு நலன் அளிக்கும் வகையில் இந்த வங்கி செயல்படும் எனவும், மற்ற வங்கிகளை விட வட்டிவிகிதம் குறைத்து வழங்குதே தங்கள் வங்கியின் சிறப்பம்சம் எனவும் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…