குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பும்,போரட்டமும் வழுபெற்று வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் விருநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் பகுதியில் ஈடுபட்டார்.அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் அதிமுக ஆட்சி தான் தொடர வேண்டும் என்று எண்ணுகின்றனர்.அதிமுகவின் வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ஆனால் சட்டம் தொடர்பான உண்மை ஒரு நாள் தெரியவரும் அப்போது இச்சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள்.தற்போது எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் இனவாதத்தையும் ,மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையும் பரப்பி வருகிறார்.மத்திய அரசு இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய போதிலும் முஸ்லீம் மத ஜமாத் மூத்த தலைவர்கள் ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகள் கைது செய்ய வேண்டும்.தீவிரவாதத்தை தூண்டும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…