நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற கமல் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் எங்களுடைய மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டு வரும் பணிகளுக்கு இடையே இந்தியன் 2 விலும் கவனம் செலுத்தி வருகிறேன்.
இது தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும்.இனி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்தியன் 2விற்கு பிறகு சினிமாவிலிருந்து விடைபெற்று விடுவேன்.நான் நடிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் என்னுடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து சினிமாவில் அதனுடைய பங்களிப்பைச் செலுத்தி வரும்.மேலும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்ததுமே என்னுடைய அரசியல் பணியானது முழு நேரமாக பணியாக மாறும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வரஉள்ளது. இந்த தேர்தலில் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ என்று தெரிவித்தார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…