இதிலும் மு.க.அழகிரிக்கு பின்னடைவா ….!கருணாநிதி விவகாரம் ….! அழகிரியை பின்னுக்குத்தள்ளிய திமுக தலைவர் ஸ்டாலின் …!

Default Image

மு.க.அழகிரிக்கு முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைவைக்க முடிவு செய்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி  கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி  திமுகவின்  தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Image result for mk alagiri mk stalin

இதேபோல் கருணாநிதியின் மூத்த மகனும் தனக்கு கட்சியில் இடம் வேண்டும் நீண்ட நநாட்களாக போராடி வந்தார்.பின்னர் சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது.

Related image

இதன் பின்னர் மு.க.அழகிரி கூறுகையில், “மதுரையில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைவைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆவின் பால் பண்ணை அருகே சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் வெண்கலத்தில் சிலை வைக்கப்படும். மிகவும் பெரிய அளவில் தத்ரூபமாக சிலை செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக சார்பிலும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைவைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள  மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு  8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது.

ஆனால் ஸ்டாலினுக்கு முன்பாக மு.க.அழகிரி திட்டம் தீட்டி வந்தார்.தற்போதைய நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்படும் சிலை தான் முழுவீச்சில் தயாராகி வருகிறது.மு.க.அழகிரி வெறும் திட்டமாக மட்டுமே வைத்துள்ளார்.அவரது சிலை திட்டம் உறுதியாக  எப்போது வெளியாகும் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
wayanad by poll election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna