இடைதேர்தலுக்கு பதில் விரைவில் சட்டமன்ற தேர்தல் பா.சிதம்பரம்….!!
தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட விரைவில் முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர்நீதிம்ன்ற 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இதனிடையே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டதால் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக மாறியுள்ளது.அரசு பெரும்பான்மைக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில் அதிமுக 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியை தற்போது தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 MLAக்களின் தொகுதிகளும் காலியானதாக தமிழக அரசு அறிவித்தால் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே தேர்தல் குறித்து முதல்வர் பழனிச்சாமியிடன் கேட்கப்பட்ட போது 20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU