சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நூறு நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நூறாவது நாளில் இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இது சோதனை முயற்சிதான் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் எனவும் எச்சரித்தார். இதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் கூறினார். மேலும், இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசியவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறியதை, தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…