ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய பெண் நிருபரிடம் நீங்கள் பேத்தி மாதிரி என்று கூறி அவரது கன்னத்தில் தட்டினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறியுள்ளார்.. தனக்கு 78 வயது ஆவதாலும் பேரன் பேத்திகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் விருப்பத்திற்கு இணங்கினால் அதிக மதிப்பெண் மற்றும் வருமானம் கிடைக்கும் என்று, தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி வற்புறுத்திய செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில், உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை உடன் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். பேராசிரியை நிர்மலாதேவியை நேரில் கூட பார்த்ததில்லை என்றும், தனக்கு பேரன் பேத்திகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக்குழுவுக்கு எந்த தடைகளும் இல்லை என்றும் வழக்கின் அனைத்து பின்புலங்களும் விசாரிக்கப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதியளித்தார்.
பல்கலைக் கழக விதிகளில் மாநில அரசு தலையிட முடியாது என்றும், உரிய விதிகளை பின்பற்றியே ஒருநபர் விசாரணைக்குழுவை தான் அமைத்திருப்பதாகவும் விளக்கம் அளித்தார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பெண் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்காதது ஏன் என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேவை ஏற்பட்டால் பெண் ஒருவரை உதவிக்கு நியமித்துக் கொள்ள விசாரணை அதிகாரி சந்தானத்திற்கு தடையில்லை என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் அரசியல் கட்சிகளின் நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க இயலாது என்று கூறினார். நிர்மலா தேவி வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவசியம் இல்லை என்று தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால், காவல்துறையினர் அவர்களின் கடமையைச் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஆளுநர் பேசிக்கொண்டே பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார்.இதனால் அந்த பெண் நிருபர் கடும் கோபமடைந்தார்.
இது குறித்து பெண் நிருபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்தியாளர் சந்திப்பு முடியும் தருவாயில் ஆளுநரிடம் நான் ஒரு கேள்வி எழுப்பினேன். ஆனால், என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு அதிகாரி என்ற தோரணையில் என் கன்னத்தில் தட்டி அமைதிப்படுத்தினார். என்னுடைய அனுமதி இல்லாமல், என்னுடையா தாத்தா போன்ற வயதுடையவர் என கூறிக் கொண்டு கன்னத்தில் தட்டுவது அவருக்கு சாதாரணமாக இருக்கலாம் , ஆனால் என்னை பொறுத்தவரை அது தவறு” என்று பகிர்ந்துள்ளார்.
மேலும் ”தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் ஒரு பெண்ணின் கன்னத்தை அவரது அனுமதி இல்லாமல் தொடுவது முறையான நடத்தை அல்ல.என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தால் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதுஒரு தாத்தாவை போன்ற அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொருத்த வரை அது தவறு” என்றும் அந்த செய்தியாளார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…