ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை அடுத்து, உதகையில் இருந்து சென்னை திரும்பினார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21ம் தேதி அவர் குடும்பத்தினருடன் சென்றார். அடுத்த மாதம் 2ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க அவர் திட்டமிட்டு இருந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பிற்பகலில் கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…