ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை தூத்துக்குடி செல்கிறார் .
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதட்ட நிலை நீடித்து வந்தது. 21ந் தேதி அன்றிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
தற்போது பதட்டம் குறைந்ததன் காரணமாக, நேற்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி சென்றனர். அங்கு துப்பாக்கி சூடு, தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
இதேபோல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை தூத்துக்குடி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளன. அங்கு கலவரம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த பிறகு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார் பன்வாரிலால் புரோகித்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…