ஆளுநர் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்யும் செயல்களுக்கு குறுக்கே நிற்கமாட்டோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக செயல் தலைவர் செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இதில் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்று கைதான மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆளுநர் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்யும் செயல்களுக்கு குறுக்கே நிற்கமாட்டோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஆளுநர் மீண்டும், மீண்டும் ஆய்வு செய்தால், திமுகவும் மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்தும் என்றும் கைதாகி விடுதலை ஆன பின்னர் தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…