ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு..!
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான கருத்து மற்றும் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைய்யெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்து இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. பஞ்சாபை போல தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகளுக்கும் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.