ஆர்கே நகர் இடைதேர்தலை நிறுத்த சதி : ஸ்டாலின் குற்றசாட்டு
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது,
‘ரூ 89 கோடி பணப்பட்டுவாடா புகார் வந்ததால் தேர்தல் ரத்தானது. ஆனால் அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் முறையாக நடைபெற்றால் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதிவேலை நடக்க வாய்ப்புள்ளது.
மேலும், ஆய்வு நடத்த ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது, ஆனால், தமிழக அரசு இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். மாயமான மீனவர்கள் குறித்து, முறையான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை’ இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.