ஆர்கே நகர் இடைதேர்தலில் 58 பேர் போட்டி : விஷால், தீபா இல்லை
ஆர்கே நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. இதன் வேட்புன்மனுதாக்கலிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
அதிமுக, திமுக, தினகரன், பாஜக, நாம் தமிழர் என பலர் வரிசை கட்டி போட்டி போட்டாலும், சுயேட்சையாக நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, பிறகு மனு ஏற்றுகொள்ளபட்டு, பின் மீண்டும் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் பெரும் சர்ச்சையை சந்தித்தது.
இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் கையெழுத்திட்ட தீபன், சுமதி ஆகியோரை தேர்தல் ஆணையர் முன் சமர்பிக்க அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்களை காணவில்லை என கூறி மீண்டும் தேர்தல் ஆணையரிடம் முறையிட்டு வாக்குவாதம் நடத்தினார். இதில் சுமதி, தீபன் நேரில் ஆஜராகி கையெழுத்து எங்களுடையது இல்லை என தேர்தல் அதிகாரியிடம் கூறியதால் விஷால் முறையீடு தோல்வியில் முடிந்தது.
தற்போது ஆர்கே நகரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 72 வாக்காளர்களில் 14 பேர் வாபாஸ் பெற்றதால் மீதமுள்ள 58 பேர் இறுதி வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் நடிகர் விஷால், தீபா உள்பட 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.