ஆர்கே நகரில் தினகரன் வெற்றிபெற்ற வழி வேறு …!இனி அதற்கு வாய்ப்பு இல்லை ….! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை தனக்கன்குளத்தில் அதிமுக பிரசார சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடக்கி வைத்தார்.இதன் பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். ஆர்கே நகரில் குறுக்கு வழியில் வெற்றிபெற்றதுபோல் தினகரனால் வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.