ஆர்எஸ்எஸ் வந்தால் தமிழகத்தில் நக்ஸலைட்டுகள் வரமாட்டார்கள்! ஹெச் .ராஜா

Default Image

பாஜக தேசிய செயலாளர் H.ராஜா,நக்ஸலைட்கள், தமிழகத்தில்  வராமல் இருக்க வேண்டும் என்றால் ,RSS வர வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  செய்தியாளர்களை சந்தித்த போது H.ராஜா இவ்வாறு கூறினார். 10 ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினமும் ஒரு ஊழல் நடந்துள்ளது. GST வரியினால், ஏழை ,நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்கள் விலை குறைந்துள்ளது என்றும், நாடு முழுவதும் 7 கோடி கழிப்பறைகள் ஏழை எளிய மக்களுக்கு  கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

கோவை , திருப்பூர் பகுதிகளில் உள்ள சிறு ,குறு தொழில்கள் நலிவடைந்து மூடியதற்கு காரணம் தமிழக அரசு தான். GST காரணம் இல்லை என்ற H. ராஜா,உலகத்திலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற 3 மாதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சேலம் முதல் சென்னை வரை உள்ள கிராமங்களில் நக்சலைட்டுகள் நிறைந்துள்ளனர்.

சேலம் மீண்டும்  ஒரு தூத்துக்குடியாக மாறுவதற்குள் நாம் தமிழர் ,மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். 50 ஆண்டு கால காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது திமுகவும், காங்கிரஸும் தான் என்ற H. ராஜா மெரினா , தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற கலவரத்திற்கு  தீய சக்திகள் தான் காரணம் என்றும் சாடினார்.சேலத்தையும் தீய சக்திகள், இதே போன்று , மிகப் பெரிய கலவர பூமியாக  மாற்ற, முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அரை மாவோயிஸ்ட்  வைகோ , சீமான்  ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ,தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் இவர்களை கைது செய்யாவிட்டால் தமிழகத்தில் ஒரு தொழிற்சாலையும் இயங்காது என்றும் கூறினார் .

பெட்ரோல் விலை கூடுவதற்கு காரணம் அமைச்சர் ஜெயக்குமார் தான் என்றும்  மைக் முன்பு உலறுவதே ஜெயக்குமார் வேலையாகி விட்டது என்றும்,lS, நக்ஸலைட்கள், தமிழகத்தில்  வராமல் இருக்க வேண்டும் என்றால் ,RSS வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price