ஆய்வில் அதிர்ச்சி தகவல்!லஞ்சம் வாங்குவதில் ஓட்டுமொத்த இந்தியாவில் முதலிடம் பிடித்தது தமிழகம்!சாதனை செய்த அரசு!

Default Image

ஆய்வில் ,ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் தெலங்கானாவும், 4-வது இடத்தில் ஆந்திராவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பல மாநிலங்களில் சிஎம்ஸ்-இந்தியா நிறுவனம், ‘ஊழல் ஆய்வு 2018’ என்ற பெயரில்  ஆய்வு நடத்தி உள்ளது. அந்த ஆய்வறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சிஎம்எஸ்-இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அலோக் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Image result for லஞ்சம்

நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இது 12-வது சுற்று ஆய்வாகும். அதன் அடிப்படையில் மாநிலங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டன. அதில், அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஊழல் பட்டியலில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

2-வது இடத்தில் தெலங்கானா மாநிலமும் 4-வது இடத்தில் ஆந்திர மாநிலமும் உள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிக குறைந்த அளவே உள்ளன. எனவே, ஊழலை கட்டுப்படுத்த இந்த மாநிலங்கள் அதிக கவனம் செலுத்தி அரசு ஏஜென்சிகளை முடுக்கிவிட வேண்டும்.

Related image

தவிர பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்துகின்றன.

மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பிஹார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஊழலை எதிர்ப்பதில் மக்கள் வேகம்காட்டுகின்றனர். ஆனால், ஆந்திரா, மேற்குவங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் பங்களிப்பு மிகக் குறைவு. இந்த ஆய்வின்போது, கடந்த ஓராண்டில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று தெலங்கானாவில் 73 சதவீத குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Image result for லஞ்சம்

 

மேலும், நாடு முழுவதும் அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கேட்கும் நிலை அதிகரித்துள்ளது அல்லது அதேநிலை நீடிக்கிறது என்று 75 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.

குறிப்பாக போக்குவரத்து, போலீஸ், வீட்டுவசதி, நில ஆவணங்கள், சுகாதாரம், மருத்துவமனை போன்ற இடங்களில்தான் ஊழல் அதிகமாக நடப்பது தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக 7 சதவீதம் பேர், வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக 3 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.இவ்வாறு அலோக் ஸ்ரீவத்ஸவா கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்