ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் கொடைக்கானலில் ரமலான் சிறப்பு தொலுகை!
இன்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகளில் சிறப்பு தொழுகைகளை நடத்துகின்றனர்.
புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்த இஸ்லாமியர்கள், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ஏழை எளியோருக்கு உதவி செய்து ஈகைப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழகத்தில் நேற்று பிறை தெரிந்ததையடுத்து, இன்று ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதேபோல் கொடைக்கானலில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொலுகையில் ஈடுபட்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.